வேதாரண்யம் கடற்கரையில் புனித நீராடி ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிப்பு
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வேதாரண்யம் கடற்கரையில் அ.தி.மு.க.வினர் புனித நீராடினர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஐந்தாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று வழக்கம்போல் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் சன்னதி கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்து பின்பு பிண்டத்தை கடலில் கரைத்து புனித நீராடினார்.
பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். உடன் உடன் ஒன்றிய செயலாளர்கள் கிரிதரன், சுப்பையன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் அ.தி..முக. தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu