அதிமுகவிற்கு வாக்கு சேகரித்த எம்ஜிஆர் !

அதிமுகவிற்கு வாக்கு சேகரித்த எம்ஜிஆர் !
X

வேதாரண்யத்தில் எம்ஜிஆர் வேடமணிந்து வீதி வீதியாக சென்று ஐந்து ஆண்டு சாதனைகளை எடுத்து கூறி அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அண்ணா தொழிற்சங்கம் சார்பாக வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ எஸ் மணியனுக்கு ஆதரவாக வேதாரண்யம் நகரத்தில் அகஸ்தியர் சன்னதியில் தரிசனம் செய்து வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓட்டு சேகரிக்கும் போது எம்ஜிஆர் வேடமணிந்து வீதிவீதியாக சென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற நலத் திட்டங்களை கூறி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று சாதனைகளை எடுத்துக்கூறி நோட்டீஸ்களை வழங்கியும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!