/* */

எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் வேதாரண்யம் அருகே கைது

எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் வேதாரண்யம் அருகே இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 14 பேர் வேதாரண்யம் அருகே கைது
X

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் தமிழக கடற்கரை பாதுகாப்பு படையினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்தி கடல் எல்லை பகுதிக்குள் நுழைந்த5 நாட்டுப் படகில் இருந்த 14 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவர்கள் ௧௪பேரும் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு தமிழக கடலோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.. பின்னர் இந்தியக் கடற்படையால் கைதான இலங்கை மீனவர்கள் நாகை துறைமுகம் அழைத்து வரப்பட்டனர். கைதான இலங்கை மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவி செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை அடிக்கடி கைது செய்வது உண்டு. இந்நிலையில் தற்போது இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன் பிடிக்க வந்ததால் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 May 2024 2:30 PM GMT

Related News

Latest News

 1. மேலூர்
  மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
 2. குமாரபாளையம்
  நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
 3. லைஃப்ஸ்டைல்
  40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
 4. லைஃப்ஸ்டைல்
  கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
 5. கிணத்துக்கடவு
  கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
 6. லைஃப்ஸ்டைல்
  எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
 7. லைஃப்ஸ்டைல்
  உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
 8. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
 9. சூலூர்
  சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
 10. லைஃப்ஸ்டைல்
  சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...