சீர்காழி அருகே பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது

சீர்காழி அருகே பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
X

பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசாருடன் உள்ளனர்.

சீர்காழி அருகே பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பணங்காட்டாங்குடி பகுதியில் கொள்ளிடம் காவல் ஆய்வாளர் அமுதாராணி, உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன தணிக்கை செய்தனர். அப்போது அவ்வழியாக மூட்டைகள் எடுத்துக்கொண்டு வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர்.

சோதனையின் போது மூட்டையில் புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் 750 இருந்தது. அதேபோல் பாண்டி சாராயம் 1,400 பாக்கெட்டுகளும் இருப்பதைக் கண்ட போலீசார் அவற்றை பறிமுதல் செய்ததோடு ,இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பாபிலோன் (22 )மற்றும் பட்டவர்த்தி அடுத்த மண்ணிப் பள்ளம் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (35 ),ஆகிய இருவரையும் கைது செய்தனர் .

மேலும் இதில் தொடர்புடைய மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த வினோத் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். மதுபான பாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்,இருசக்கர வாகனம் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.ஐந்து லட்சம் என போலீசார் தெரிவித்தனர் . காரைக்கால் பகுதியில் இருந்து சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிக்கு இவ்வாறு அடிக்கடி மதுபானம் மற்றும் சாராய பாக்கெட்கள் கடத்திவந்து அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிட்தக்கது.

Tags

Next Story
ai marketing future