துர்கா பரமேஸ்வரி தலைமையில் சீர்காழி நகர் மன்றத்தின் முதல் கூட்டம்

சீர்காழி நகராட்சி முதல் கூட்டம் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடந்தது.
சீர்காழி நகர்மன்ற முதல் கூட்டம் தி.மு.க. நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. நன்றி அறிவிப்பு கூட்டமாக நடைபெற்ற இந்த முதல் கூட்டத்திலேயே புதிதாக பொறுப்பேற்றுள்ள நகர்மன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை சுட்டிக்காட்டி பேசினர்.
தே.மு.தி.க. உறுப்பினர் ராஜசேகரன் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் கடந்த 40 ஆண்டுகளாகவே குடிசைப் பகுதிகள் உள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றப்படுவதில்லை என குற்றஞ்சாட்டினார். நகரில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் கூறினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நகரமைப்பு ஆய்வாளர் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில், 62 பூங்காக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், குறிப்பாக வனத்துறை சார்பில் 1200 சதுர அடி பூங்கா பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார். இவை அனைத்தும் குறிப்புகள் எடுக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பெற்று ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும் என நகர் மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu