சீர்காழியில் மேக வெடிப்பா? ஒரே நாளில் கொட்டி தீர்த்தது 44 செ.மீ. மழை

சீர்காழியில் மேக வெடிப்பா? ஒரே நாளில் கொட்டி தீர்த்தது 44 செ.மீ. மழை
X

சீர்காழிய பகுதியில் ஒரே நாளில் பெய்த 44 செ.மீ. மழையால் தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்.

சீர்காழியில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த44 செ.மீ. மழையால் மேக வெடிப்பா என்ற கேள்வி எழுந்தது.

சீர்காழியில் ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இது மேக வெடிப்பு அல்ல என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி உள்ளதால் தமிழகத்தில் கடந்த பத்தாம் தேதியிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. 11ஆம் தேதியான நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை உட்பட 18 மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது முந்தைய நாள் இரவு தொடங்கிய மழை நேற்று இரவு வரை இதுகொண்டே இருந்தது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரே நாளில் 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது .இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், ஏரி எல்லாம் நிரம்பி விட்டன. சீர்காழி நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் சீர்காழியை சுற்றியுள்ள பேட்டங்குடி, நாராயணபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது .இதனால் மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து வருகிறார்கள். தரங்கம்பாடியில் கடல் அலை சீட்டதுடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. சீர்காழியில் இதுவரை இது போன்ற பலத்த மழையை பார்த்ததில்லை என அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் இடுப்பளவு மழை நீர் தேங்கி இருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 44 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையானது 122 ஆண்டுகளில் இல்லாத அளவு அளவுக்கு சீர்காழியில் பெய்துள்ளது. இத்தனை அதிக மழை பெய்ததற்கு மேக வெடிப்பு காரணமாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வந்தன. ஆனால் இது மேக வெடிப்பு அல்ல. இது முழுக்க முழுக்க காற்று அழுத்தத்தினால் பெய்துள்ளது. மேக வெடிப்பு மழை என்றால் ஒரு மணி நேரத்தில் அதிக மழை பெய்வது . இந்த மழைக்கு முன்பும் பின்பும் மழை இல்லாமல் இருக்கும். இதுதான் மேக வெடிப்பு. ஆனால் சீர்காழியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. எனவே இதை மேக வெடிப்பு என சொல்லக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் தங்களது கிராமங்களுக்கு வந்து உடனடியாக நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் தமிழக முதல்வர் சீர்காழி பகுதிக்கு வந்து நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் அல்லது அமைச்சர்களை அனுப்ப வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் மனு அனுப்பி உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி