பாலியல் தொல்லை ஆசாமிக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பாலியல் தொல்லை ஆசாமிக்கு  இரட்டை ஆயுள் தண்டனை
X
சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமிக்கு வாலிபருக்கு நாகை கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள திருச்செங்காட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் மணிபாரதி (27). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த சிறுமியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிபாரதியை கைது செய்தனர். இந்த வழக்கு நாகை சிறப்பு அமர்வு நீதிமன்றம் (போக்சோ) நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி தமிழரசி மணிபாரதிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து மணிபாரதியை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!