நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாகையில் இன்று அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாகையில் இன்று அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்
X

நாகையில் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மணியன் தலைமையில் நடைபெற்றது.

நாகை நகராட்சி 36 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட முடிவு; முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் பேட்டி.

நாகை நகராட்சி 36 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட முடிவு; பாஜக இதுவரை ஒரு சீட் கேட்டுக் கூட வரவில்லை; முன்னாள் அமைச்சர் ஓஎஸ் மணியன் பேட்டி.

உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து அதிமுக சார்பாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி நாகை அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் ஓஎஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற நேர்காணலில் நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளை சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள் கலந்துகொண்டனர். நேர்காணலுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஓ எஸ் மணியன் கூறுகையில்; நாகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு வார்டுகளில் கூட போட்டியிடுவதற்கு பாஜக அதிமுகவை நாடவில்லை என்றும், ஆகவே முப்பத்தி ஆறு வார்டுகளிலும் அதிமுக நேரடியாக களம் காண இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுகவை விமர்சித்துப் பேசிய பாஜக நயினார் நாகேந்தினருக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இது நாகரீகமான அரசியல்வாதி பேசக்கூடிய வார்த்தை இல்லை என்று விமர்சித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்