/* */

மாவட்டம் உருவானதை பறைசாற்றும் நாகை-30 மினி மாரத்தான் ஓட்டம்

நாகை மாவட்டம் உருவானதையொட்டி நாகை- 30 மினி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

மாவட்டம் உருவானதை பறைசாற்றும்  நாகை-30   மினி மாரத்தான் ஓட்டம்
X

நாகப்பட்டினம் மாவட்டம் உருவாகி முப்பதாண்டு ஆனதையொட்டி நாகை -30    விழா நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் தொடங்கப்பட்டு இருபத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவுற்று 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இதனை பறைசாற்றும் வகையில், நாகை 30-ம் ஆண்டில் முதலிடம் நோக்கி என்ற பெயரில் ஐந்து நாட்களுக்கு விமரிசையாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இன்று தொடங்கும் நாகை 30 முதலிடம் நோக்கி கொண்டாட்ட விழா வரும் 22ஆம் தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.


நாகையில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஆட்சியர் அலுவலகம் வரை ஓடி வந்தனர். முன்னதாக மாரத்தான் ஓட்ட ஜோதியினை ஆட்சியர் அருண் தம்புராஜ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறும் விழாவில், பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஓவியப்போட்டிகள், கட்டுரைப்போட்டி, பட்டிமன்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நடைபெற உள்ளன.

Updated On: 18 Oct 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு