நாகூரில் முகக்கவசம் ஜாங்கிரி கொடுத்து ஓட்டு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர்

நாகூரில் முகக்கவசம் ஜாங்கிரி கொடுத்து ஓட்டு கேட்ட காங்கிரஸ் வேட்பாளர்
X

நாகூரில் காங்கிரஸ் வேட்பாளர் முக கவசம் வழங்கி ஓட்டு சேகரித்தார்.

நாகூரில் முகக்கவசம், ஜாங்கிரி கொடுத்து காங்கிரஸ் வேட்பாளர் வீடு வீடாக ஓட்டு சேகரித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்காக அ.தி.மு.க. தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் அந்தந்த வார்டுகளில் வாக்கு சேகரிப்பு பணியில் முனைப்பு காட்டி வருகின்றனர். நாகை நகராட்சி 8,வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பக்கிரிசாமி நாகூரில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் வீடு வீடாகச் சென்ற வேட்பாளர், வாக்காளர்களிடம் முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஜாங்கிரி வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!