மீனவர்கள் தலைக்கு இலங்கை கடற்படை குறி; குண்டு துகள்கள் அகற்றம்.. துப்பாக்கிச்சூடு பீதி
மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவரும் குண்டடிபட்ட மீனவர்.
நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த 28ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் அனைவரும் நேற்று மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகை மீனவர்கள் படகுகளில் படுத்துக்கொண்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் நாகை அக்கரைப்பேட்டை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் தலையில் குண்டு பாய்ந்தது. இதில் மீனவர் கலைச்செல்வன் ரத்த வெள்ளத்திலே படகிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து குண்டடிபட்ட மீனவரை காப்பாற்ற, சக மீனவர்கள் கரை நோக்கி படகை திருப்பினர். அப்போதும் விடாமல் இலங்கை கடற்படை இவர்களின் படகை விரட்டி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படை அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்களின் பல படகுகளை மீண்டும் மீண்டும் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைக்கண்டு மீனவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். இதையடுத்து, அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த அனைத்து மீனவர்களும் அவசர, அவசரமாக கரை திரும்பினர்.
இதனிடையே குண்டடிபட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர் கலைச்செல்வனை நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தலையில் குண்டு சிராய்ப்புக் துகள்களை அகற்றி அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu