இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதிக்க கோரிக்கை
ரமலான் நோன்பு தொடங்க உள்ளதால் வழிபாட்டு தலங்களில் இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டுமென உலமாக்கள் சங்கத்தினர் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
கொரோனா வைரசின் 2 வது அலை தமிழகத்தில் அதிவேகமேடுக்க தொடங்கியுள்ளதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இரவு 8 மணிக்குள் மூடப்படும் எனவும் அரசு அறிவித்தது. இந்நிலையில் வருகின்ற 13 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு கால பண்டிகை தொடங்க உள்ளதால் உலமாக்கள் சபையினர் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த அவர்கள், ஊரக வளர்ச்சி துறை நேர்முக உதவியாளர் மெய்தீன் பிச்சையை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது நோன்பு காலத்தில் வழக்கமாக இரவு தொழுகை நடத்துவதற்கு வசதியாக பள்ளி வாசல்களை இரவு 10 மணிவரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu