நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து, நாகை மீனவர்கள் 10 பேர் மாயம்
கொச்சி மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் உள்ளிட்ட அவரது தந்தை இடும்பன், சகோதரர் மணிவேல் உள்ளிட்ட 10 மீனவர்கள் 29,ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் எச்சரிக்கையை அறிந்த நாகை மீனவர்கள், அவசர அவசரமாக விசைப்படகை கொச்சி துறைமுகத்தை நோக்கி திருப்பினர். அதிகாலை 3 மணி அளவில் அரபிக் கடலை நோக்கி நாகை மீனவர்களின் விசைப்படகு வந்துகொண்டிருந்த பொழுது படகு திடீரென புயலில் சிக்கியது.
அப்போது எழுந்த ராட்சத அலையில் விசைப்படகு தூக்கி வீசப்பட்டு கடலில் மூழ்கியது. புயலில் சிக்கிய 10 மீனவர்கள் நடுக்கடலில் தூக்கி வீசப்பட்டு மாயமாகினர். இதுகுறித்து அருகில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய நாகையை சேர்ந்த மீனவர்கள் சாமந்தான்பேட்டை கிராமத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த மீனவர்களின் உறவினர்கள் புயலில் சிக்கி மாயமான நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களையும் மீட்க வேண்டும் கதறி அழுதனர். மேலூர் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நாகை மீனவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் கொண்டு தேடுதல் பணியை முடுக்கி விட வேண்டும் எனவும் அவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu