நாகூர் ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை

நாகூர் ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜை
X

யாக பூஜைக்காக யானை மீது புனித நீர் எடுத்து வரப்பட்டது.

நாகூர் நாகநாத சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யானை மீது புனித நீர் எடுத்துவரப்பட்டு யாக பூஜை தொடங்கியது.

ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் புகழ்பெற்ற நாகை மாவட்டம் நாகூர் ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயிலின் கும்பாபிஷேகம் வருகின்ற 23 ஆம் தேதி 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. இன்று காலை கோபூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை நடைபெற்ற நிலையில் யாகசாலை பூஜைக்காக கலசத்தில் புனிதநீர் எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.

புனிதநீர் வைக்கப்பட்ட கலசம் சிறப்பு பூஜை செய்ய சுவாமி மலையில் இருந்து வரவழைக்கப்பட்ட யானையின் மீது வைக்கப்பட்டு ஊர்வலமாக நாகநாத சுவாமி ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது. மங்கள இசை முழங்க யானை மீது வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊர்வலத்தை வழிநெடுகிலும் நின்ற பக்தர்கள் வழிபட்டனர்.

இதையடுத்து யானை மீது வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கலசத்தை சிவாச்சாரியார்கள் சிவன் சன்னதிக்கு எடுத்து சென்று பூஜை செய்தனர். வருகின்ற 23 ஆம் தேதி ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமையன்று, கும்பாபிஷேக நிகழ்ச்சி கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களை கொண்டு நடைபெற உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!