நாகையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் வழங்கினார்

நாகையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் வழங்கினார்
X

நாகப்பட்டினத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலமாக புதிதாக நியமிக்கப்பட்ட தற்காலிக மருத்துவர் செவிலியர் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு நாகை மருத்துவக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட 17 மருத்துவர் 45 செவிலியர்கள் உள்ளிட்ட 130 சுகாதார பணியாளர்களுக்கு தமிழக சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பணி நியமன சான்றிதழ்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மெய்யநாதன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக இருந்த 17 மருத்துவர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாகை மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தார்,

மேலும் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிசன்கள் தட்டுப்பாடுகள் இன்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,

அதேபோன்று தனியார் மருத்துவமனைகளுக்கும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஆக்சிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், மேலும் கொரோனா சிகிச்சை மையங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!