நாகையில் குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பு, கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கல்

நாகையில் குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பு, கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கல்
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட தொற்றில் குணமடைந்த குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்புகளை கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு தொகுபபுகளை கலெக்டர் பிரவீன் நாயர் வழங்கினார்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை நிறைவு பெற்ற 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பை வழங்கினார். இந்த சத்துணவுத் தொகுப்பில் ஒரு கிலோ சத்து மாவு, பேரிச்சம்பழம், கொண்டை கடலை, பால்பவுடர், நாட்டுச்சக்கரை, ஆரஞ்சு ,கொய்யா, எலுமிச்சை அடங்கிய பழங்கள் 2 கிலோ அளவில் இருந்தன.

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றாள் பாதிக்கப்பட்டு சிகிச்சை நிறைவு பெற்ற 452 குழந்தைகளுக்கு இந்த சத்துணவு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், . குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் மலர்விழி, இந்த சத்துணவு திட்டத்திற்கான நிதியை வழங்கிய தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!