நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : ஒருவர் கைது.
நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல்.
புகையிலை பதுக்கி வைத்திருந்த ராஜாராமன்.
நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 173 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராஜாராமன் கைது செய்யப்பட்டார்.
நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினத்தில் அடுத்த தெத்தி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு இரகசியகிடைத்தது. இதனையடுத்து தனிப்படை உதவி ஆய்வாளர் பத்மசேகர் தலைமையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
அப்பொழுது தெத்தி தெற்குத் தெருவில் ராஜாராமன் (69) என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 175 கிலோ 375 கிராம் எடையுள்ள 800 புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் நாகூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தனர். மேலும், புகையிலை மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu