நாகையில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைப்பு

நாகையில் புதிய நியாய விலை கடையை  சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைப்பு
X

ரேஷன் கடையை ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நாகையில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்.

நாகை மாவட்டம் முட்டம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 12 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

முன்னதாக ரிப்பனை வெட்டி தொடங்கி வைத்ததோடு குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் பாலையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பி சந்திரசேகர் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் எஸ். முத்தமிழ் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி