நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனையில் உலக மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்

நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனையில் உலக மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்
X
உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு.

உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனை மருத்துவர்களுக்கு பொது மக்கள் மலர் தூவி வரவேற்பு.

உலக மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடபடுவதை முன்னிட்டு கொரோனா காலத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் நாடுமுழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மலர் மழையினால் உற்சாக வரவேற்பு இன்று அளிக்கப்பட்டது. இன்று காலை மருத்துவனைக்கு பணிக்கு வந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் நாகூர் ஆண்டவர் அரசினர் மருத்துவமனை ஆலோசனை குழு சார்பாக மலர்களை தூவி வரவேற்றனர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

Tags

Next Story