நாகை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் அரியவகை மூலிகை பூங்கா திறப்பு
நாகை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மூலிகை தோப்பினை எஸ்.பி. ஜவகர் திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் காடம்பாடியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட அரியவகை மூலிகைகள் கொண்ட மூலிகை பூங்காவை நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் இன்று திறந்து வைத்தார் .
மேலும் பலம் தரும் வாழை, கொய்யா, சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட பலன் தரும் பல செடிகள் தோட்டத்தையும் திறந்து வைத்தார். பின்னர் ஆயுதப்படை காவலர்கள் இடம் பேசுகையில் தற்போது உள்ள சூழ்நிலையில் காற்று மாசுபடுவதை தவிர்க்கவும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், இதுபோன்ற பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காவலர்களை வலியுறுத்தினார்கள்.
மேலும் காவலர்கள் அனைவரும் தங்களது வாழ்நாளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு காற்று மாசுபடுவதை தடுக்க நம்மால் முடிந்த அளவு நாம் அனைவரும் உதவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இன்று தேசிய பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், போக்சோ வழக்குகள் மற்றும் இலவச தொலைபேசி எண்கள்.181, 1098, ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்கள். ஆயுதப்படை மைதானம் என்றாலே பழைய இரும்பு வாகனங்களும் வழக்கு தொடர்பான வாகனங்களும் குவிந்து பாழடைந்து கிடக்கும் மைதானமாக காட்சியளிக்கும் நிலையில் மாவட்ட கண்காணிப்பாளரின் இந்த புதிய முயற்சி பசுமையான தோட்டமாக மாறி இருப்பது மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu