நாகப்பட்டினத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் .
நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன்
சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்ற 16 ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பிஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டம், பனங்குடி கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோல் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது. சுமார் 618 ஏக்கர் பரப்பளவில், 38 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பிஆர்.பாண்டியன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த டெல்டா மாவட்டங்களை பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பிஆர்.பாண்டியன் கூறுகையில் ; நாகை மாவட்டம் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட 40 கிராமங்களில் சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகளுக்கு நில எடுப்பு பணிகளை கைவிட வேண்டும். இல்லையென்றால் வருகின்ற 16 ஆம் தேதி 40 கிராம விவசாயிகளை ஒன்று திரட்டி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu