நாகையில் காளான் விதை உற்பத்தி ஆய்வுக் கூடம் திறப்பு

நாகையில் காளான் விதை உற்பத்தி ஆய்வுக் கூடம் திறப்பு
X
நாகையில் காளான் விதை உற்பத்தி ஆய்வு கூடத்தை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.
நாகையில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள காளான் விதை உற்பத்தி ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது.

நாகையில் காளான் விதை உற்பத்தி ஆய்வுகூடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. 20 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக துவங்கப்பட்ட காளான் விதை உற்பத்தி ஆய்வுக் கூடத்தை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து காளான் விதை உற்பத்தி இயந்திரங்களையும் பார்வையிட்டனர். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காளான் விதை உற்பத்தி ஆய்வுக் கூடத்தில், நாளொன்றுக்கு 120 கிலோ காளான் விதை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வேலைவாய்ப்பையும் அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.

நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்ட சுய உதவிக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture