நாகையில் ராகவேந்திரா மடாலயத்தில் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகையில் ராகவேந்திரா மடாலயத்தில் ஜெயந்தி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
X

நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழாவையாெட்டி மாஞ்சாலி அம்மனுக்கு 10,20,50,100 ஆகிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நாகை ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழாவையாெட்டி மாஞ்சாலி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நாகையில் ராகவேந்திரா மடாலயத்தில் நடைபெற்ற ஜெயந்தி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு. ரூபாய் நோட்டுகளில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் தரிசனம்.

நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா இன்று வெகு விமர்சிக்க நடைபெற்றது. ராகவேந்திரர் அவதரித்த தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் நாகை வெளிப்பாளையம் ராகவேந்திரர் மடாலயத்தில் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று கொடியேற்றத்துடன் ஜெயந்தி விழா தொடங்கியது.

அப்போது ராகவேந்திர அஷ்டாஷர ஹோமம், மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ மாஞ்சாலி அம்மனுக்கு 10,20,50,100 ஆகிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ரூபாய் நோட்டுகள் செய்யப்பட்டு இருந்த சிறப்பு அலங்காரத்தில் ராகவேந்திரா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
ai and business intelligence