நாகை மாவட்டத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை

நாகை மாவட்டத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை
X

நாகை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அருண்ராஜ் விவசாயிகளிடம் குறை கேட்டார்.

நாகை மாவட்டத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் 31 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறை செயலர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் அருண்ராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

திருமருகல் மற்றும் மேலபூதனூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பு அலுவலர், ஊழியர்கள் மற்றும் விவசாயிகளிடம் கொள்முதல் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களை பார்வையிட்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்டும், சாக்கு மூட்டைகள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும், நெல் உலர வைக்கும் இயந்திரம் அனைத்து கொள்முதல் நிலையங்களுக்கும் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இந்த ஆய்வின் போது நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம், வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!