பட்டமளிப்பு விழா நடைபெறுமா ? மாணவர்கள் குழப்பம்!

பட்டமளிப்பு விழா நடைபெறுமா ? மாணவர்கள் குழப்பம்!
X

நாகப்பட்டினத்தில் மீன்வள பல்கலைகழக பதிவாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கவர்னர் தலைமையில் பட்டமளிப்பு விழா நடைபெறுமா என மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைகழக பதிவாளர் சீனிவாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வருகின்ற 29 ஆம் தேதி பல்கலைகழகத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிால் புரோஹித் பங்கேற்கும் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்காக சில தினங்களுக்கு முன்பு பல்கலைகழகத்தில் நடைபெற்ற முன்னேற்பாடுகள் குறித்த கூட்டத்தில் பதிவாளர் பங்கேற்ற நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பதிவாளர் சீனிவாசன் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழக ஆளுநர் தலைமையில் வருகின்ற 29 ம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறுமா? என கேள்வி எழுந்துள்ளது.

Tags

Next Story