நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு

நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
X

நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

நாகை மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாகப்பட்டினம் கோட்டை வாசலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமை தாங்கினார்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் தமிழகத்தை மு. க. ஸ்டாலினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்றும் அ.தி.மு.க. தற்போது களத்தில் கிடையாது என்றும் இதனால் அ.தி.மு.க. குறித்து பேச தேவையில்லை என்றும் தமிழகத்தில் அ.தி.மு..க இல்லை என்றும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து அகில இந்திய அளவில் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் வென்ற நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற மாணவியை பாராட்டி சால்வை அணிவித்தார். மேலும் அடுத்த கட்டமாக உலக அளவில் நேபாள நாட்டில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கு பெறுவதற்காக 30 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!