/* */

நாகை: வீட்டில் இருந்த சிலிண்டரை திருடி சென்ற நபருக்கு போலீஸ் வலைவீச்சு

நாகையில் வீட்டில் இருந்த சிலிண்டரை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

நாகை: வீட்டில் இருந்த சிலிண்டரை திருடி சென்ற நபருக்கு போலீஸ் வலைவீச்சு
X
தனது வீட்டில் சிலிண்டர் திருட்டு போனது பற்றி சரோஜா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மத்திய அரசின் மாதாந்திர சிலிண்டர் விலை உயர்வால் நடுத்தர குடும்ப பெண்மணிகள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நாகையில் வீட்டிலிருந்த புதிய சிலிண்டரை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை சிவன் கீழவீதி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். கோவில் பூசாரியான இவர் தனது மனைவி சரோஜா, மகன் சக்திதாஸ் ஆகியோரோடு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனிடையே கடந்த மாதம் 23 ஆம் தேதி புக்கிங் செய்து, 27 ஆம் தேதி 1050 ரூபாய் கொடுத்து வாங்கிய சிலிண்டரை வீட்டின் வராண்டாவில் வைத்துவிட்டு நேற்று இரவு மூவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் முகமூடி அணிந்துக்கொண்டு வீட்டு வாசலின் கேட்டை திறந்து உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் வராண்டாவில் இருந்த சிலிண்டரை நகர்த்தும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு சக்திதாஸ் வெளியே வந்தபோது சிலிண்டரை திருடிவிட்டு மர்ம நபர் ஒருவர் தப்பியுள்ளார்.

தொடர்ந்து அவரை துரத்தி பிடிக்கவே, அவரை தள்ளிவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஏறி முகமூடி அணிந்து வந்த இருவரும் தப்பி சென்றுள்ளனர். நள்ளிரவு நடந்த சிலிண்டர் திருட்டு சம்பவம் குறித்து தியாகராஜன், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசின் கடும் சிலிண்டர் விலை ஏற்றத்தால் குடும்ப பெண்மணிகள் கலக்கத்தில் இருந்து வரும் நிலையில், நாகையில் வீட்டில் இருந்த சிலிண்டரை மட்டும் குறித்து வைத்து மர்ம கும்பல் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 Nov 2021 3:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?