இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அமர்ந்த கலெக்டர்

இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சியில்  மாணவர்களுடன் அமர்ந்த கலெக்டர்
X

நாகையில் நடந்த இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் தரையில் அமர்ந்து மாணவர்களுடன் உரையாடினார்.

நாகையில் நடந்த இல்லம் தேடி கல்வி திட்ட நிகழ்ச்சியில் மாணவர்களோடு தரையில் அமர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் உரையாடினார்.

1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கொரோனா காலத்தில் தடைபட்ட கல்வியறிவை மீட்டெடுக்கும் விதமாக, தமிழக அரசு சார்பாக தன்னாா்வலா்களைக் கொண்டு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தின் மூலம் மாலை நேர வகுப்புகள் நடத்தப்படுகிறது.

அதன்படி இல்லம் தேடி கல்வி திட்டத்தை நாகை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் இன்று தொடங்கி வைத்தார். அழிஞ்சமங்கலம், பாலையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மாலை வகுப்புகளில் பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தன்னார்வலர்கள் வீடுகளில் நடைபெற்ற வகுப்புகளில் மாணவர்களோடு தரையில் அமர்ந்தபடி பங்கேற்ற நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் மாணவர்களிடையே உரையாடினார். தொடர்ந்து மாணவ மாணவிகளை கவரும் வகையில் விழிப்புணா்வு தப்பாட்டம், கரகாட்டம், பாடல், நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!