நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் : கலெக்டர் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  பூஸ்டர் தடுப்பூசி முகாம் : கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில்  பூஸ்டர் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த கலெக்டர் அருண் தம்புராஜ்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த முகாமில் 60 வயதிற்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவத் துறையினர் உள்ளிட்ட 1451 நபர்களுக்கு இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் மருத்துவமனைகளில் 450 படுக்கை வசதியுடன் கூடிய 3 கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business