நாகூர் தர்காவின் 465ம் ஆண்டு கந்தூரி விழா: கொடியேற்றத்துடன் துவக்கம்

நாகூர் தர்காவின் 465ம் ஆண்டு கந்தூரி விழா:  கொடியேற்றத்துடன் துவக்கம்
X

நாகூர் தர்காவின் 465 ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.

நாகூர் தர்காவின் 465 ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.

உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. மதநல்லிணக்க வழிபாட்டு தலமாக விளங்கும் இந்த தர்காவில் நாகூர் ஆண்டவரின் மறைந்த தினம் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக நாகை மீராப்பள்ளி ரதத்தடியில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு, சிங்கப்பூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கொடிகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் ஊர்வலமாக சென்றது. பெரிய ரதம், சின்ன ரதம், டீஸ்டா கப்பல், செட்டி பல்லக்கு, என 5 ரதங்களில் கொடிகள் எடுத்து வரப்பட, மினரா, சிறிய கப்பல், நகராமேடை, சாம்பிராணிசட்டி, பிறை, படகு போன்ற வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ரதங்கள் மேல தாலங்களுடன் ஊர்வலமாக நாகூரை வந்து சேர்ந்தது. பின்னர், ஊர்வலம் நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலை வந்தடைந்ததும், தர்காவின் பரம்பரை கலிபா பாத்திஹா ஓதியதை அடுத்து மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து கொண்டிருந்த 5 மினராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் ஏற்றப்பட்டன.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாண வேடிக்கை உள்ளிட்ட கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பபட்ட நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் முக கவசம் அணிந்தவர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து கந்தூரி விழாவையொட்டி நாகை எஸ்பி ஜவஹர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருகின்ற 13 ஆம் தேதி நாகையில் இருந்து நாகூர் தர்கா வரை சந்தனக்கூடு ஊர்வலமும், மறுநாள் 14 ஆம் தேதி அதிகாலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவமும் நடைபெற உள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil