அமைச்சரின் அலட்சியத்தால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் ஸ்டாலின் குற்றச்சாட்டு
உணவுத்துறை அமைச்சரின் அலட்சியத்தால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் வீணாகியுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மேலும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கிடையாது கமிஷன்ராஜ் என தெரிவித்தார்.
தமிழகம் மீட்போம் என்ற தலைப்பில், 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்தவாறு பங்கேற்று உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் மூத்த முன்னோடிகள் 200 பேருக்கு பொற்கிழி வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது,கொரோனா காலத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ரேஷன் அரிசியை பதுக்கி வெளிச்சந்தையில் விற்பனை செய்து ஊழல் செய்தார் என குற்றம் சாட்டிய மு க ஸ்டாலின், புயல் நேரத்தில் உணவுத்துறை அமைச்சரின் அலட்சியத்தால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் முளைத்து வீணாகியதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அமைச்சர் காமராஜ் மீது ஊழல் புகார்களை முன் வைத்துப் பேசிய முக.ஸ்டாலின் அவரது பெயர் இனி காமராஜ் கிடையாது கமிஷன்ராஜ் என்றும் விமர்சித்தார். தொடர்ந்து பேசிய முக.ஸ்டாலின், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனக்கு சொந்தமான இறால் பண்ணைகளை மேம்படுத்துவதற்காக அடப்பாற்றில் தடுப்பணை கட்டி விவசாயிகளுக்கு பெறும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும், ஓரடியம்புலம் சமுதாய கூடத்தை இடித்து தரை மட்டமாக்கி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது சொந்தப் மாட்டுக் கொட்டகையாக மாற்றியது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu