தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சாலை மறியல்
21 மாத கால எட்டாவது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்கிட வேண்டும் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
21 மாத கால எட்டாவது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்கிட வேண்டும் மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில், நியாய விலை கடை பணியாளர் சங்கம், டாஸ்மாக் பணியாளர் சங்கம் மற்றும் சாலை பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மறியல் ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் சத்துணவு பணியாளர்கள், அவுட்சோர்சிங் பணியாளர்கள் மற்றும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வரவில்லை என்றால், வரும் தேர்தலில் அரசுக்கு எதிராக தங்களது வாக்குகள் திரும்பும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu