நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் பணிகள் தொடக்கம்

நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் பணிகள் தொடக்கம்
X

புரெவி புயலால் சேதமடைந்த உலக புகழ் பெற்ற நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் பணிகள் 4.34 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் ஓஎஸ்.மணியன், வளர்மதி பங்கேற்றனர்.

புரெவி புயலால் உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா குளத்தின் சுற்று சுவர்கள் இடிந்து சேதமடைந்தது. இந்நிலையில் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர்களை சீரமைக்க தமிழக அரசு 4.34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. அதற்கான கட்டுமான பணிகளை தமிழக கைத்தறிதுறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் இன்று காலை தொடங்கி வைத்தனர். தர்கா குளம் அருகே நடைபெற்ற சிறப்பு பாத்திகாவில் அமைச்சர்கள் ஓஎஸ்.மணியன் மற்றும் வளர்மதி ஆகியோர் இஸ்லாமியர்களோடு இணைந்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story