வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
X

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்த கோரி நாகப்பட்டினத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், தனியார் துறையில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நாகை அவுரி திடலில் இருந்து பேரணியாக புறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதனையடுத்து வட்டாட்சியர் ரமாதேவி மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் . இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நாகை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளனர்.

Tags

Next Story