நாகையில் பெரும் தீ விபத்து

நாகையில் பெரும் தீ விபத்து
X
நாகையில் 7 வீடுகளில் தீ விபத்து, பல லட்சம் ரூபாய் தங்க நகைகள், 2,லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசம்.

நாகப்பட்டினம் வெளிப்பாளையம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். ஆட்டோ ஓட்டுநரான இவர் இன்று காலை வீட்டை பூட்டி விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இவரது வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென அந்தவீடு தீ பற்றி எரிந்தது. தீ மளமளவென அருகிலிருந்த வீடுகளுக்கு பரவியதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் காற்றின் வேகத்தில் 7 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் தினேஷ்குமார் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் முற்றிலும் தீயில் கருகியது. இதைப்போல் மாலதி, மாரிமுத்து, ஈஸ்வரன் ஆகியோரின் வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் கட்டில் பீரோ, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமானது.

Tags

Next Story