நாகையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
X
ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி, நாகையில் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைக்காகப் போராடிய ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை என கூறி வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று நாகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு, சிறப்பு நிலை ஊதியங்கள் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை திரும்ப வழங்கிட வேண்டுமென வலியுறுத்தியும், ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 வயது எனும் உச்சவரம்பை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் கல்வி பயிற்று மொழியாகவும், ஆட்சி அலுவல் மொழியாகவும் தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story