வள்ளலார் கோவிலில் திருவிளக்கு பூஜை

வள்ளலார் கோவிலில் திருவிளக்கு பூஜை
X
சீர்காழியை அடுத்த தென்பாதியில் அமைந்துள்ளது வள்ளலார் ஆலயம், இன்று நடைபெற்ற விளக்கு பூஜையில், பெண்கள் அதிகமாக பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்பாதியில் அமைந்துள்ளது வள்ளலார் ஆலயம். இவ்வாலயத்தின் 67 ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது. அதனையடுத்து ஆலயத்தில் வள்ளலாரின் திருவுருவப் படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் சீர்காழி, தென்பாதி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி குங்குமம் மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!