சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் மாற்று ஏற்பாடு!

சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் மாற்று ஏற்பாடு!
X

மயிலாடுதுறையில் சபரிமலை செல்லமுடியாத பக்தர்கள் மாற்று ஏற்பாடு செய்தனர்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மார்கழி 1-ஆம் தேதி மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்தால், பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள அரசு விதித்துள்ளது. அதன்படி, சபரிமலைக்கு செல்வதற்கு 48 மணி நேரத்துக்குள்ளாக எடுக்கப்பட்ட கரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சபரிமலை செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

மயிலாடுதுறையில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தின் 38-வது ஆண்டாக குருசாமி தமிழசரன் மற்றும் குருசாமி கோபு ஆகியோரிடம் மாலை அணிந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பதினெட்டு படிகள் ஏற முடியாமல் போனதை கூறி தவித்ததையடுத்து, அவர்களது குறையை நிவர்த்தி செய்யும் விதமாக மயிலாடுதுறையிலேயே மரத்தினால் 18 படிகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் படியேறிச் சென்று ஐயப்பனை வழிபடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக ஐயப்பனுக்கு சபரிமலையில் செய்வது போன்றே பால், தயிர்,திரவியங்கள், மஞ்சள், அரிசிமாவு, இளநீர், பஞ்சாமிர்தம், அனைத்து வகைபழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனால் 18 படிகளில் ஏறி ஐயப்பனை தரிசித்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்த மனநிறைவை அடைந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!