பழைய இரும்புக் கடையில் இலவச பாடப்புத்தகங்கள் :அரசு ஊழியர் கைது

பழைய இரும்புக் கடையில் இலவச பாடப்புத்தகங்கள் :அரசு ஊழியர் கைது
X

மயிலாடுதுறையில் பழைய இரும்புக் கடையில் இலவச பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்றது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில், முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான பழைய இரும்புக் கடையில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான இலவச பள்ளிப் பாடப் புத்தகங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக புகார் எழுந்தது. இதனையடுத்து கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தப்போது 2019 - 20ஆம் ஆண்டுக்கான சுமார் 5 ஆயிரம் பாடப் புத்தகங்கள் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து பறிமுதல் செய்த அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்படி, பழைய இரும்புக் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், பழைய இரும்புக் கடையில் இலவச பள்ளிப் பாடப் புத்தகங்களை விற்றது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!