வேளாங்கண்ணி அருகே தெருவிளக்கு இல்லாததால் இளைஞர்கள் தீப்பந்த போராட்டம்

வேளாங்கண்ணி அருகே தெருவிளக்கு இல்லாததால் இளைஞர்கள்  தீப்பந்த போராட்டம்
X

நாகை அருகே தெருவிளக்கு இல்லாததால் தீப்பந்த போராட்டம் நடந்தது.

வேளாங்கண்ணி அருகே தெருவிளக்கு இல்லாததால் சமூக விரோத செயல்களை தடுக்க இளைஞர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட கொய்யா தோப்பு பகுதியில் தெருவிளக்கு இல்லாததால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து தெரு விளக்கு அமைத்து தரக்கோரி தீப்பந்தங்கள் மற்றும் அரிக்கன் விளக்கு ஏற்றி அப்பகுதியில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இருளை சாதகமாக்கி திருட்டு சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறுவதாகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் இப்பகுதியில் போதிய தெரு விளக்கு அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இரவு நேரத்தில் திடீரென தீப்பந்தம் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!