இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்களுக்கு வரவேற்பு
சொந்த ஊர் திரும்பிய நாகை மீனவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. இந்த நிலையில் விடுதலையான நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வம், மணிகண்டன், ஆறுமுகம், வினோதன், கந்தன், நரசிம்மன் உள்ளிட்ட மீனவர்கள் விமானம் மூலம் இன்று சென்னை வந்தனர். அதனை தொடர்ந்து சொந்த ஊரான நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன் பிடி துறைமுகம் திரும்பிய மீனவர்களை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
தொடர்ந்து மீனவர்களுக்கு கிராம நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இருநாட்டு மீனவர்களுக்கு இடையே சமூக பேச்சு வார்த்தை நடத்தி கடலில் சுதந்திரமாக மீன் பிடிக்க வழிவகை செய்ய ஒன்றிய மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu