அறநிலையத்துறைக்கு சொந்தமான குளத்தில் ஆகாய தாமரைகளை அப்புறப்படுத்த கோரிக்கை
நாகப்பட்டினம் அருகே அறநிலையத்துறைக்கு சொந்தமான குளத்தில் மண்டியுள்ள ஆகாய தாமரைகளை அப்புறப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் வேப்பஞ்சேரி ஊராட்சி மேலதண்ணிலபாடியில் 2 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான பெருமாள் கோயில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிப்பவர்கள் இந்த குளத்தில் குடிநீருக்காகவும், குளிப்பதற்கும் மற்றும் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வந்தனர். இந்த குளத்தை 5 வருடங்களுக்கு முன்புவரை குடிதண்ணீருக்காக சுற்றி உள்ள கிராம மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திவந்த இந்த குளத்தில் ஆகாயத்தாமரை வளர்ந்து குளிக்க முடியாத அளவிற்கு நிரம்பி உள்ளது.
மேலும் இந்த குளத்தில் சுற்றுவட்டாரப் பகுதியான வேப்பஞ்சேரி, கீழதண்ணிலபாடி, மரைக்கான்கட்டளை ,பாலக்குறிச்சி, ஒட்டதட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கோடை காலங்களில் குளிப்பதற்காக வந்து செல்வது வழக்கம். தற்போது ஆகாய தாமரை மண்டியள்ளது. இதை அப்புறபடுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அதனால் 30 வருடத்திற்கு மேலாக பழமைவாய்ந்த இந்த குளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு குளத்தை தூர்வாரி, ஆகாயத் தாமரையை அப்புறப்படுத்தி தருமாறு அந்த ஊர் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu