வேளாங்கண்ணி ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
X

வேளாங்கண்ணியில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் புனித வெள்ளியையொட்டி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. அப்போது இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டுகள், திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவை பாதை, சிறப்பு மறையுரை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அப்போது பேராலய அதிபர் பிரபாகர் மற்றும் பங்குதந்தை,உதவி பங்குத்தந்தையர்கள் ஆகியோர் சிலுவை ஆராதணை செய்தனர். எப்பொழுதும் ஏசு சிலையின் பாதத்தை முத்தமிடும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக முத்தம் செய்தல் நடைபெறவில்லை.

பின்னர் கலையரங்கத்தில் ஏசு சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அபோது அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஏசு சிலையை ஆராதனை செய்தனர். பின்னர் ஏசுவின் சிலை சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக மேல்கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகள் , பக்தர்கள் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture