வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழா பெரிய தேர்பவனி 

வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழா பெரிய தேர்பவனி 
X

வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி கொரோனா பரவல் காரணமாக எளிய முறையில் நடைபெற்றது.

வேளாங்கண்ணி புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய தேர்பவனி எளிய முறையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பேராலத்தின் உபகோவிலான பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது.

முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்கு தந்தை அற்புதராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் ஆண்டுதோறும் மூன்று சொரூபங்கள் செல்லும் நிலையில் இந்த ஆண்டு கொரனா பரவல் காரணமாக செபஸ்தியார் 1 சொரூபம் மட்டுமே எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எளிய முறையில் சென்ற தேர்பவனியில் குறைவான பக்தர்களே பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதனைதொடர்ந்து தப்பாட்டமும் நடைபெற்றது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil