வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் 20 நாட்களுக்கு பின் இன்று திறப்பு

20 நாட்களுக்குப் பின் வேளாங்கண்ணி மாதா பேராலயம் இன்று திறக்கப்பட்டு இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 தேதி வரை ஆண்டு திருவிழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் விழாவில் இந்த ஆண்டு கொரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் விடுதிகள் கடைகள் திறக்க அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி கடந்த மாதம் இருபத்தி ஏழாம் தேதி முதல் 10 தேதி வரை தடை உத்தரவு அமலில் இருந்தது. தடைகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் கடைகள் திறக்கப்பட்டன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பேராலயத்தில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் 20 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் அனுமதிக்காக வேளாங்கண்ணி மாதா பேராலயம் இன்று திறக்கப்பட்டது. இதனையடுத்து வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வர தொடங்கி உள்ளதால் சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. ேவளாங்கண்ணி மாதா ஆலயம் திறக்கப்பட்டு இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Tags

Next Story