வேளாங்கண்ணியில் கல்லறைத் திருநாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலி
கல்லறை திருநாளையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை மாதா ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது.
இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாக கல்லறை திருநாளை கிறிஸ்தவர்கள் கடை பிடித்து வருகிறார்கள். அதன்படி இன்று கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது.இதில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள்கலந்து கொண்டு பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் இறந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரம் பேர் கிழக்கு கடற்கரைசாலை ஆர்ச் அருகில் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டத்தில் கல்லறைத்திருநாள் வழிபாடு நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu