நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் நாகை அரசு தலைமை மருத்துவமனை, நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை, வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட 15 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதை தவிர பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கடந்த சில தினங்களாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக போடப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் 10 ஆயிரம் தடுப்பூசிகள் வந்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நாகை அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் 4வது முறையாக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் முன்னிலையில் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Tags

Next Story