நாகை அருகே இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

நாகை அருகே இருசக்கர வாகனம் திருட்டு: சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு
X

மர்ம நபர்கள் 2 பேர் இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி.

நாகை அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது.

நாகை அருகே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனக்கு சொந்தமான விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு முன்னால் நிறுத்தி வழக்கம்போல் இரவு உறங்கச் சென்று உள்ளார். இந்த நிலையில் காலையில் அவர் எழுந்து பார்த்த பொழுது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த நிலையில் 2 மர்ம நபர்கள் Yamaha FCZ என்ற விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் பரபரப்பு காட்சிகள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது இந்த காட்சியைக் கொண்டு கீழையூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் இன்று அதிகாலை 3 மணி அளவில் பரவை காய்கறி சந்தைக்கு சென்ற தெற்கு பொய்கைநல்லூரில் சேர்ந்த ஷரிப்முகமது என்பவரை கத்தி முனையில் மூன்று இளைஞர்கள் மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பித்து உள்ளனர். நாகை வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இதுபோன்று இருசக்கர வாகனம் ஆடுகள் மற்றும் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!