கீழ்வேளூர் பேரூராட்சி தேர்தல்: அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு

கீழ்வேளூர் பேரூராட்சி தேர்தல்: அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரிப்பு
X

நாகை மாவட்டம் கீழ் வேளூரில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் மெய்யநாதன் பிரச்சாரம் செய்தார்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் மெய்யநாதன் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னக்கடைதெரு, அரசாணிகுளம், தெற்குவீதி,மேலவீதி, கச்சனம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க,காங்கிரஸ். ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்