தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகை அருகே கைது

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகை அருகே  கைது
X

நாகையில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ரவுடி செந்தில்.

Thoothukudi Rowdy-தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி நாகை அருகே பதுங்கி இருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

Thoothukudi Rowdy-தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்(42). இவர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு கொலை வழக்குகள் உட்பட 10க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் ரவுடி பட்டியலில் உள்ள செந்திலை தூத்துக்குடி போலீசார் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் தேடி வந்தனர்.

இதனிடையே செந்திலின் செல்போனை ஆய்வு செய்தபோது நாகை மாவட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி போலீசார் நாகை போலீசாருக்கு கொடுத்த தகவலின்படி கீழ்வேளூர் பகுதியில் பதுங்கி இருந்த செந்திலை அதிகாலை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி போலீசார் நாகை விரைந்து வந்து செந்திலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!